சத்தியமங்கலம் அருகே விரட்டிய வனத்துறையினரை துரத்திய கோவக்கார காட்டு யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானையை விரட்ட சென்ற வனத்துறையினரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-09-15 03:30 GMT
சத்தியமங்கலம் அருகே விரட்டிய  வனத்துறையினரை துரத்திய கோவக்கார காட்டு யானை

இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்திய கோவக்கார காட்டு யானை.

  • whatsapp icon

சத்தியமங்கலம் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானையை விரட்ட சென்ற வனத்துறையினரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி - ஆசனூர் சாலையில் கும்டாபுரம் செல்லும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை சாலையில் உலா வந்தது.

அப்போது, சாலையில் வாகனங்களை வழிமறித்து மண்ணை தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டு கோவமாக நின்றிருந்தது. மேலும், சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த சிலரை துரத்தியது. இதனால், வாகன ஓட்டிகள் பீதியடைந்து வாகனங்களை திருப்பிக் கொண்டு சென்றனர்.

உடனே, இதுகுறித்து வாகன ஓட்டிகள் தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், கோவக்கார காட்டு யானை அவர்களையும் துரத்தியதால் அவர்கள் ஓட்டம் பிடித்து தப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அரை மணி நேரத்துக்கும் மேலாக சாலையில் உலா வந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து, வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

Tags:    

Similar News