பெருந்துறையில் 17ல் திமுக நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா

ஈரோடு திமுக ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா வருகிற 17ம் தேதி பெருந்துறையில் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழி வழங்குகிறார்.;

Update: 2023-11-14 12:30 GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஈரோடு திமுக ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா வருகிற 17ம் தேதி பெருந்துறையில் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழி வழங்குகிறார்.

தமிழகம் முழுவதும் திமுகவில் உள்ள மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளை கவரப்படுத்தும் வகையில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திமுக ஈரோடு தெற்கு, வடக்கு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி வருகிற 17ம் தேதி பெருந்துறை அடுத்துள்ள சரளையில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் திமுக இளைஞரணி தலைவரும், தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கம் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழிகளை வழங்குகிறார்.

இதேபோல், கொரோனா தொற்றினால் இறந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து அருகில் உள்ள மற்றொரு அரங்கில் ஈரோடு ஒருங்கிணைந்த திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதைத்தொடர்ந்து அன்று மாலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.

Tags:    

Similar News