கோபி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.60 கோடி ஏமாற்றிய வழக்கு: 2 ஆசிரியைகள் கைது

Erode News- ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.60 கோடி ஏமாற்றிய வழக்கில் ஆசிரியைகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-08-09 03:00 GMT

Erode News- கைது செய்யப்பட்ட பிரபா, குடியரசி.

Erode News, Erode News Today- கோபி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.60 கோடி ஏமாற்றிய வழக்கில் ஆசிரியைகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாகர்பாளையம் நஞ்சப்பா நகரைச் சேர்ந்தவர் பிரபா (வயது 47). இவர் வண்ணாந்துறைப்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் குடியரசி (வயது 46). குளோரி (வயது 60).

இதில், குடியரசி கோபி அவ்வையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். குளோரி ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

இவர்களிடம், கோபியை சேர்ந்த பழனிசாமி (வயது 57) உட்பட எட்டு பேர் ஏலச்சீட்டில் பணம் கட்டியுள்ளனர். ஆனால், சீட்டு தேதி முடிந்தும் 3 பேரும் ஏலம் எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இவ்வாறாக, ஏலச்சீட்டு நடத்தி மொத்தம் ரூ.1.60 கோடி ரூபாய் தொகையை திருப்பி கொடுக்காமல் அவர்கள் ஏமாற்றி வந்ததால், பழனிசாமி கோபி போலீசில் புகாரளித்தார். 

புகாரின்பேரில், ஆசிரியைகள் மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆசிரியைகள் பிரபா, குடியரசி ஆகியோரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள குளோரியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News