சத்தியமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

Update: 2024-08-18 00:27 GMT

கிணற்றில் விழுந்த காட்டெருமையை கிரேன் மூலம் மீட்ட வனத்துறையினர்.

சத்தியமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்குய்யனூர் எஸ்.டி.எப்.கேம்ப் பின்புறம் ராமசாமி என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணற்றில் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது.

இந்த கிணற்றில் நேற்று (17ம் தேதி) காலை வித்தியாசமான சத்தம் கேட்டது. கிணற்றை எட்டி பார்த்தபோது, தண்ணீர் குறைவாக இருந்தத கிணற்றின் ஒரு ஓரத்தில் காட்டெருமை நின்று கொண்டிருந்தது.

இதுகுறித்து உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள், சத்தியமங்கலம் வனச்சரகர் மற்றும் வனத்துறையினர், கால்நடை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

காட்டெருமை ஆக்ரோஷமாக இருந்ததால், மயக்க ஊசி செலுத்தி கயிறு கட்டி 50 அடி ஆழ கிணற்றிலிருந்து கிரேன் மூலம் மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமைக்கு வயது ஒன்பது இருக்கும். இரை தேடி வந்த போது கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்றனர். இதனையடுத்து, மீட்கப்பட்ட காட்டெருமை பண்ணாரி வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

Tags:    

Similar News