தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி எருமை உயிரிழப்பு..!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி எருமை உயிரிழந்தது.

Update: 2024-06-18 14:15 GMT

சிறுத்தை (கோப்புப் படம்).

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி எருமை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஆசனூர் வனக்கோட்டம் கேர்மாளம் வனச்சரகத்திக்கு உட்பட்ட திங்களூர் அருகே உள்ள டி.பி.தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேவசாமி (வயது 48). இவர், 4 மாடுகள், 2 எருமைகளை வளர்த்து வருகிறார். அவைகளை வழக்கம் போல தனது நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

பின்னர், மாலையில் அவைகளை பிடிக்க சென்றபோது எருமை ஒன்று காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்த போது சிறிது தூரத்தில் எருமை மர்ம விலங்கால் கடிப்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே இது குறித்து கேர்மாளம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அருகே உள்ள கால் தடத்தை பார்த்தபோது அது சிறுத்தையின் கால்தடம் என்பதும், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை எருமையை அடித்துக் கொன்றதும் தெரியவந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பீதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News