அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை
Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைக்கிராமத்தை சோ்ந்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.;
Erode news- ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தையுடன் மருத்துவ நுட்புனர் அங்கமுத்து மற்றும் ஓட்டுநர் சதீஸ்குமார்.
Erode news, Erode news today- அந்தியூர் அருகே பர்கூர் மலைக்கிராமத்தை சோ்ந்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெற்ற பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைக் கிராமமான தம்முரெட்டியைச் சேர்ந்தவர் முருகேஷ். இவரது மனைவி சிந்து (வயது 22). சிந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் சிந்துவுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனை அறிந்த அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சதீஸ்குமார் அவசரகால மருத்துவ நுட்புனர் அங்கமுத்து சிந்துவை மீட்டு பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி விரைந்து சென்றனர்.
ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது சிந்துவுக்கு பிரசவ வலி அதிகமாகவே வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி மருத்துவ நுட்புனர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மருத்துவ சிகிச்சை அளித்து பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்று அங்கு தாயும், சேயும் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.
சாதுரியமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சதீஸ்குமார் மற்றும் மருத்துவ நுட்புனர் அங்கமுத்துவுக்கு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.