நாடாளுமன்றத் தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை
Erode news- நாடாளுமன்றத் தோ்தலையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
Erode news- 4 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை (மாதிரி படம்)
Erode news, Erode news today- நாடாளுமன்றத் தோ்தலையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் 2024 வாக்குப்பதிவு நாள் (ஏப்ரல் 19ம் தேதி) மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் (ஜூன் 4ம் தேதி) ஆகிய தினங்களில் நடைபெறும் மதுவிற்பனையை கட்டுப்படுத்த அனைத்து வகையான மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது .
அதனைத் தொடர்ந்து, வரும் ஏப்ரல் 17, 18, 19ம் தேதிகளிலும் மற்றும் ஜூன் 4ம் தேதியும் என மொத்தம் 4 நாள்கள் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்எல்2/ எப்எல்3 மதுபான உரிமதலங்கள் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.