சித்தோடு அருகே குடோனில் பதுக்கிய 80 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

Erode news- ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடோனில் 80 கிலோ புகையிலைப் பொருட்கள் பதுக்கிய ராஜஸ்தான் வியாபாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2024-03-05 19:30 GMT
Erode news- கைதான இருவரை படத்தில் காணலாம்.

Erode news, Erode news today- சித்தோடு அருகே குடோனில் 80 கிலோ புகையிலைப் பொருட்கள் பதுக்கிய ராஜஸ்தான் வியாபாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சித்தோடு அருகே உள்ள கொங்கம்பாளையம், இந்திரா நகரில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி ஜவஹருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், உரிய நடவடிக்கை எடுக்க சித்தோடு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனால், இந்திரா நகரில் சித்தோடு போலீசார் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள குடோனில் 80 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சகாராம் மகன் அசோக்குமார் (வயது 34), இந்தராம் மகன் கோவிந்த் (வயது 28) ஆகியோரைக் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் தற்போது கொல்லம்பாளையம், இந்திரா நகரில் வசித்து வருவதும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ரகசியமாக வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த சித்தோடு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News