ஈரோடு மாநகராட்சியுடன் இணையும் 7 ஊராட்சி, கோபி நகராட்சியுடன் இணையும் பேரூராட்சி

Erode news- ஈரோடு மாநகராட்சியுடன் 7 ஊராட்சிகள், கோபி நகராட்சியுடன் 1 பேரூராட்சி, பவானி நகராட்சியுடன் 2 ஊராட்சியை இணைக்கவும், பெருந்துறை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2024-09-30 00:45 GMT

Erode news- ஈரோடு மாநகராட்சியின் வரைபடம்.

Erode news, Erode news today- ஈரோடு மாநகராட்சியுடன் 7 ஊராட்சிகள், கோபி நகராட்சியுடன் 1 பேரூராட்சி, பவானி நகராட்சியுடன் 2 ஊராட்சியை இணைக்கவும், பெருந்துறை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படவும் அரசுக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

நமது மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த குழுவில் இணையுங்கள். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட செய்திகள் நொடிக்கு நொடி. 

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் மறுவரையறை செய்யப்படுகிறது. இதற்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதன்படி , ஈரோடு மாநகராட்சியில் புதிதாக 7 ஊராட்சிகள் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளன.

ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த எலவமலை, கதிரம்பட்டி, கூரப்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம், பிச்சாண்டாம்பாளையம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 46 புதூர், லக்காபுரம் ஆகிய 7 ஊராட்சிகள் ஈரோடு மாநகராட்சியோடு இணைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த 7 ஊராட்சிகள் இணைக்கப்படும் பட்சத்தில், மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 60ல் இருந்து 75ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அதேபோல், பவானி நகராட்சியுடன் ஆண்டிக்குளம் மற்றும் குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிகளும், கோபிசெட்டிபாளையம் நகராட்சியுடன் லக்கம்பட்டி பேரூராட்சி, வெள்ளாளபாளையம், கலங்கியம், மொடச்சூர், பாரியூர், குள்ளம்பாளையம் ஆகிய ஐந்து ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளது.

இதேபோல், சத்தியமங்கலம் நகராட்சியில் கொமராபாளையம் ஊராட்சியும், புஞ்சைப்புளியம்பட்டி நகராட்சியில் நொச்சிக்குட்டை, மாதம்பாளையம், நல்லூர் ஆகிய மூன்று ஊராட்சிகளும் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பெருந்துறை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News