ஈரோடு மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி 66 சதவீதம் நிறைவு

Erode news- ஈரோடு மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி 66 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேலு கூறியுள்ளார்.

Update: 2024-07-04 06:00 GMT

Erode news- கோமாரி நோய் தடுப்பூசி (பைல் படம்).

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி 66 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேலு கூறியதாவது:-

கால்நடைகளை தாக்கும் நோய்களில் கோமாரி நோயானது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதனை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி முதல் தடுப்பூசி போடும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 11 ஆயிரத்து 450 கால்நடைகள் உள்ளன. இதில் நேற்று முன்தினம் 2ம் தேதி வரை 2 லட்சத்து 8 ஆயிரத்து 50 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன்படி, 66 சதவீத கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்துள்ளது.

வருகின்ற 10ம் தேதி கடைசி நாளாகும். அதற்குள் விடுபட்டுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும். பர்கூர் மலைப்பகுதியில் பட்டி அமைத்து மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளுக்கு காலை அல்லது மாலை நேரத்தில் நேரடியாக மருத்துவர்கள் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News