ஈரோடு வாசவி கல்லூரியில் 57வது ஆண்டு விளையாட்டு விழா
Erode news- ஈரோடு அடுத்த சித்தோடு அருகே உள்ள வாசவி கல்லூரியில் 57ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.;
Erode news- விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Erode news, Erode news today- ஈரோடு அடுத்த சித்தோடு அருகே உள்ள வாசவி கல்லூரியில் 57ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
ஈரோடு அடுத்த சித்தோடு அருகே உள்ள ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு, கல்லூரி செயலர் ரோட்டரி சதாசிவம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கோவை பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் பொறுப்பு முனைவர் ராஜேஷ்வரன் மற்றும் கௌரவ விருந்தினராக தமிழ்நாடு உடற்கல்விகள் மற்றும் விளையாட்டு பல்கலை பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் முனைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இந்த விழாவினை, கல்லூரி முதல்வர் முனைவர் தாமரைக்கண்ணன் வரவேற்புரை ஆற்றி விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். நடைபெற்ற, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளையும் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும், பேராசிரியர் மற்றும் ஆசிரியர்யல்லா பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகளை நடத்தி அவர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ்விளையாட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு ஃபேஷன் செலிபிரிட்டி லாவண்யா மற்றும் திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் மகாலட்சுமி, கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விளையாட்டு விழாவின் ஆண்டு அறிக்கையை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் வாசித்து, நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில், கல்லூரி பேராசிரியர், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.