டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 44,790 பேர் பங்கேற்பு

Erode news- ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஜூன்.9) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வில் 44,790 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்‌.

Update: 2024-06-09 08:15 GMT

Erode news- ஈரோடு கொல்லம்பாளையம் கார்மல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஜூன்.9) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வில் 44,790 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்‌.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் கொல்லம்பாளையம் கார்மல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது அவர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, அந்தியூர், பவானி, கோபிசெட்டிபாளையம், கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர், பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 9 வட்டங்களில் 194 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் பதவிகளுக்கான தேர்வினை எழுத 57 ஆயிரத்து 218 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 44 ஆயிரத்து 790 (78.28 சதவீதம்) பேர் பங்கேற்பு தேர்வு எழுதினர். 12 ஆயிரத்து 248 (21.72 சதவீதம்) பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

இத்தேர்வினை கண்காணிக்க 9 வட்டங்களிலும் துணை ஆட்சியர் நிலையில் 9 கண்காணிப்பு அலுவலர்களும், 15 பறக்கும்படை அலுவலர்களும், 45 நடமாடும் குழுவும், 194 ஒளிப்பதிவாளர்களும், தலைமையாசிரியர், முதல்வர் நிலையில் 194 முதன்மை அறை கண்காணிப்பாளர்களும், உதவியாளர், இளநிலை உதவியாளர் நிலையில் 194 அறை கண்காணிப்பு அலுவலர்களும், மேலும் காவல் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறையினரும் ஈடுபட்டனர்.

இத்தேர்விற்காக ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்து, இயக்கப்பட்டது. மேலும், தேர்வு மையங்களில் தேவையான தடையில்லா மின்சாரம், கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News