நம்பியூர் ஒன்றியத்தில் ரூ.4.08 கோடி வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4.08 கோடி வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-09-26 11:45 GMT

நம்பியூர் எம்மாம்பூண்டியில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு வருவதை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4.08 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எம்மாம்பூண்டி, வேமாண்டம்பாளையம் மற்றும் கரட்டுப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, எம்மாம்பூண்டி ஊராட்சி எம்மாம்பூண்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.39 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அதனைத் தொடர்ந்து, எம்மாம்பூண்டி ஊராட்சி எம்மாம்பூண்டி பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.39.96 லட்சம் மதிப்பீட்டில் எம்மாம்பூண்டி மயானம் முதல் ஊராட்சி எல்லை வரை சாலை அமைக்கப்பட்டு வருவதையும், வேமாண்டம்பாளையம் ஊராட்சி சரவணகுட்டை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நீர்வரத்து வாய்க்கால் அமைக்கப்பட்டு வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனையடுத்து, காந்திநகர் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 6 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், தொடர்ந்து வேமாண்டம்பாளையம், பழையூர் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கு பட்டா வழங்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


மேலும், கரட்டுப்பாளையம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு விடுதி மற்றும் ஜிம்னாஸ்டிக் அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், ஜெ.ஜெ நகரில் நாபர்டு திட்டத்தின் கீழ், அளுக்குளி முதல் ஜெ.ஜெ நகர் வரை ரூ.2.24 கோடி மதிப்பீட்டில் புதியதாக பாலம் கட்டும் பணி என மொத்தம் ரூ.4 கோடியே 7 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உரிய காலத்திற்குள் கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, நம்பியூர் வட்டாட்சியர் ஜாகிர் உசேன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சரஸ்வதி, ஒன்றிய பொறியாளர் ராமசாமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News