நம்பியூரில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்களிடம் இருந்து ஒன்றரை டன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2021-12-20 05:30 GMT

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள  நம்பியூர் பிலியம்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நம்பியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போது, ஒன்றரை டன் அளவுள்ள ரேஷன் அரிசி 30 மூட்டைகளில் இருந்தது. போலீசார் ரேஷன் அரிசியையும், அதை கடத்த பயன்படுத்திய வேன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், ரேசன் அரிசி கடத்திய கார்த்தி (வயது 42), சக்திவேல் (வயது 27),  ராஜூ (வயது 45) மற்றும் வனிதா (வயது 33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், 4 பேரும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News