கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் பகுதிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-22 15:15 GMT

செல்போன் திருட்டில் ஈடுபட்ட 4 பேர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் குமரகுரு, இவரது மனைவி புவனேஷ்வரி(40), இவர் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு சுற்றுலா நேற்று வந்துள்ளார். செல்போனை பையில் வைத்து விட்டு அணையில் குளித்துக்கொண்டு இருந்துள்ளார்.

திரும்பி வந்து பையில் இருந்த செல்போனை புவனேஸ்வரி பார்த்தபோது காணவில்லை. சம்பவ இடத்தில் இருந்து இரு நபர்கள் செல்போனை திருடி செல்வது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து புவனேஷ்வரி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் செல்போன் திருடிய புளியம்பட்டி அருகேயுள்ள காராப்பாடியை சேர்ந்த சீனிவாசன் மகன் ரமேஸ்(26), வடக்கு மோதூரை சேர்ந்த சாமிநாதன் மகன் தேவராஜ்(25) ஆகியோரை விரட்டி பிடித்து பங்களாப்புதூர் போலீசில் ஒப்படைத்தனர்.

அதே போன்று டி.என்.பாளையத்தை சேர்ந்த ராஜேஸ் கண்ணா(40) என்பவர் அதே பகுதியில் உள்ள ஒர்க்‌ஷாப் ஒன்றில் வேலை செய்து வருகிறார், அவரது ஒர்க்‌ஷாப்பிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வேலை கேட்டு மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளனர். அப்போது டேபிள் மேல் ராஜேஷ் கண்ணா வைத்து இருந்த செல்போனை கொங்கர்பாளையம் இந்தி்ராநகரை சேர்ந்த வேலுசாமி மகன் ராகவன்(24), பழையூரை சேர்ந்த பிரதீப் (22) ஆகியோர் லாபகமாக எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர்.இதுகுறித்து ராஜேஸ்கண்ணா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து செல்போன் திருடர்களை தேடிவந்த பங்களாப்புதூர் போலீசார் ராகவன், பிரதீப் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 2 விலை உயர்ந்த செல்போன்களை கைப்பற்றிய பங்களாப்புதூர் போலீசார், வெவ்வேறு பகுதிகளில் செல்போன்கள் திருட்டில் ஈடுபட்ட ராகவன், பிரதீப், ரமேஸ், தேவராஜ் ஆகிய 4 நபர்களையும் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News