பெருந்துறை அருகே காரில் கடத்திய 397 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காரில் கடத்திய 397 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

Update: 2024-06-21 23:45 GMT

காரில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்களையும், கைது செய்யப்பட்ட புனாம ராம் சவுத்ரியையும் படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பெருந்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகப்படும் வகையில் கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. உடனே அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்று, சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி நின்றது.

இதனையடுத்து, போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து, காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசராணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வியாபாரியான புனாம ராம் சவுத்ரி (வயது 39) என்பதும், தற்போது திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வசித்து வரும் அவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அவினாசிக்கு காரில் கடத்தி சென்று கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து புனாம ராம் சவுத்ரியை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 77 மூட்டைகளில் இருந்த ரூ.3 லட்சத்து 21 ஆயிரத்து 720 மதிப்பிலான 397 கிலோ புகையிலை பொருட்களையும்,  கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News