ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 335 மனுக்கள்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 335 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

Update: 2023-12-11 11:30 GMT

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்டறிந்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 335 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை (இன்று) நடைபெற்றது.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 335 மனுக்கள் பெறப்பட்டன.


பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு விலையில்லா சலவை பெட்டிகளையும், 10 பயனாளிகளுக்கு மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 33 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 94 ஆயிரத்து 810 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா (பொறுப்பு), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் குமரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News