ஈரோடு மாவட்டத்தில் 3 ரேஷன் கடை விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2024-10-08 15:00 GMT

ரேஷன் கடை விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் தரமாகவும், முறைகேடுகள் இன்றியும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

நீங்கள் விரும்பும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த குழுவில் இணையுங்கள். குழுவுக்கு செல் | ஃபோலோ செய்

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக முறைகேடுகளைத் தடுக்க கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள 3 நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதனால் சம்பந்தப்பட்ட திரு.வி.க ரோடு சூரம்பட்டி - லதா, கணேசபுரம் & நம்பியூர்-4 - இந்திராணி, ஊராட்சிக்கோட்டை -பிரபு ஆகிய மூன்று விற்பனையாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்திட ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News