கோபியில் 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!
Erode news- ஈரோடு மாவட்டம் கோபியில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
Erode news, Erode news today- கோபியில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் மானுவக்காட்டைச் சேர்ந்த தர்மன் மகன் மூர்த்தி (வயது 32). ஓடத்துறை கிழக்காலூரைச் சேர்ந்த தங்கமணி மனைவி மங்களநாயகி (வயது 35). அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி சசிகலா (வயது 35).
இவர்கள் 3 பேரும் சேர்ந்து 16 வயதுடைய சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இதுகுறித்த புகாரில் 3 பேரும் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் 3 பேரும் கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவுக்கு பரிந்துரை செய்தார். அவர் அதை ஏற்று சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து இதற்கான உத்தரவு கடிதம் கோவை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.