சத்தியமங்கலம் அருகே போலி இரிடியம் கொடுத்து பணம் பறித்த 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே போலி இரிடியம் சொம்பை கொடுத்து பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-08-20 00:14 GMT

கைது செய்யப்பட்ட 3 பேரை படத்தில் காணலாம்.

சத்தியமங்கலம் அருகே போலி இரிடியம் சொம்பை கொடுத்து பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 43). கூலித்தொழிலாளி. இதேபோல், சத்தியமங்கலம்  அருகே உள்ள தேள்கரடு அண்ணா நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 43).

இவரது நண்பர்களான கரட்டூரைச் சேர்ந்த ஜீனத்குமார் (வயது 27), கொமராபாளையத்தைச் சேர்ந்த பிரபு (வயது 36), அன்னூரைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் சுப்பிரமணியனுக்கு பழக்கமாகி உள்ளனர்.

இவர்கள் 4 பேரும் தங்களிடம் இரிடியம் சொம்பு உள்ளதாகவும், விற்று கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் சுப்பிரமணியனிடம் கூறியுள்ளனர். சொம்பை காட்டுமாறு சுப்பிரமணியம் கேட்டதற்கு, 4 பேரும் ரூ.10 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர்.

இதை நம்பி அவர்களிடம் ரூ.10 ஆயிரத்தை சுப்பிரமணியம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட 4 பேரும் கொமராபாளையத்தில் உள்ள தவளகிரி ஆண்டவர் மலைக்கோவில் அருகிலுக்கு வரவழைத்து சொம்பை காட்டியுள்ளனர்.

அது போலி என்பதை உணர்ந்த சுப்பிரமணியம் கொடுத்த ரூ.10 ஆயிரம் ரூபாயை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால், பணத்தை திரும்ப தர மறுத்த 4 பேரும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பின்னர், இதுகுறித்து சுப்பிரமணியம் சத்தியமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில், பாண்டியன், ஜீனத்குமார், பிரபு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News