பங்களாப்புதூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
பங்களாப்புதூர் அருகே உள்ள கள்ளிப்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம், பங்களாப்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது, காரில் ரேஷன் அரிசியை 3 பேர் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் அளுக்குளி பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், பவானிசாகர் பகுதியை சேர்ந்த சுரேஷ், பவானி பகுதியை சேர்ந்த கோபி ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் ரேஷன் அரிசி கடத்திய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 600 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து, மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.