ஈரோடு மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கு 2ம் பருவ பாடப்புத்தகங்கள் தயார்!
Erode news- ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கு 2ம் பருவ பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.;
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கு 2ம் பருவ பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நேற்று (19ம் தேதி) தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 27ம் தேதி நிறைவு பெற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, மீண்டும் அனைத்து பள்ளிகளும் அக்டோபர் மாதம் 3ம் தேதி திறக்கப்பட உள்ளன.
இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்களில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்க 2ம் பருவ பாடப்புத்தகம், நோட்டு- புத்தகங்கள் வந்தன. இவை ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள இருப்பு அறையில் வகுப்பு மற்றும் பாட வாரியாக வைக்கப்பட்டு உள்ளன.
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே புத்தகம் வழங்கப்பட உள்ளது.