தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு ஈரோட்டில் 2ம் கட்ட பயிற்சி

Erode news- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நாடாளுமன்றத் தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

Update: 2024-04-17 12:45 GMT

Erode news- பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நாடாளுமன்றத் தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (19ம் தேதி) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை சிறப்பான முறையில் நடத்திட பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள 230 தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு, மாவட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

இந்தப் பயிற்சி வகுப்பில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்திடும் வகையில், தேர்தல் பணிபுரியும் அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டது.

இப்பயிற்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News