சத்தியமங்கலம் வட்டப் பகுதிகளில் 2வது நாளாக ஈரோடு ஆட்சியர் ஆய்வு
Erode News- உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், 2வது நாளாக சத்தியமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (22ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Erode News, Erode News Today- உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், 2வது நாளாக சத்தியமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (22ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை, நியாய விலைக் கடை, அங்கன்வாடி மையம், துணை சுகாதார நிலையங்கள் பல்வேறு இடங்களில் நேற்று (21ம் தேதி) ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அனைத்துத் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று (22ம் தேதி) சத்தியமங்கலம் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு, கழிவறை வசதி, மின்சாரம் உள்ளிட்டவை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற தூய்மை பணிகளையும், மாக்கினாங்கோம்பை பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கையான கழிவுநீர் கால்வாய் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, மாக்கினாங்கோம்பை அரசு தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவினை சுவைத்துப் பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அதேப் பகுதியில் குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் உள்ள குளோரின் அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, சத்தியமங்கலம் வட்டம், குள்ளங்கரடு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பணிகள், தாட்கோ அரசு பழங்குடியினர் நல மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது, சத்தியமங்கலம் வட்டாட்சியர் சக்திவேல் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.