உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் 2வது நாளாக ஈரோடு ஆட்சியர் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ், கொடுமுடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா 2வது நாளாக கள ஆய்வு மேற்கொண்டார்‌.

Update: 2024-06-20 08:49 GMT

கொடுமுடி நகப்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட உணவினை ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா சாப்பிட்டு ருசி பார்த்தார்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் 2வது நாளான இன்று (20ம் தேதி) ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடுமுடி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (19ம் தேதி) கொடுமுடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை துறைச் சார்ந்த முதன்மை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திடவும், குறைகள் உள்ள இடங்களில் அதனை உடனடியாக நிவர்த்தி செய்யவும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, 2வது நாளான இன்று (20ம் தேதி) கொடுமுடி சாலைப்புதூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த விவசாயிகளிடம் கோரிக்கைகளை அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து கொடுமுடி தேர்வுநிலை பேரூராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் குளோரினேஷன் செய்யப்பட்டு தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


மேலும், குருக்கள் தெருவில் வீடுகளுக்கு விநியோகம் செய்யும் குடிநீரில் உள்ள குளோரின் அளவு  அனைத்து இணைப்புகளுக்கும் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, கொடுமுடி பேரூராட்சி கணபதிபாளையத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்ட வளமீட்பு பூங்காவில் பேரூராட்சி துறையின் மூலம் திடக்கழிவு மேலாண்மை செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, நகப்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ள காலை உணவினை சுவைத்து பார்த்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியர் தலைவரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ் (சத்துணவு), செல்வராஜ் (வளர்ச்சி), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News