ஈரோடு பஸ் நிலையத்தில் 20 கிலோ தின்பண்டங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

ஈரோடு பேருந்து நிலையத்தில் சுகாதாரமற்ற, காலாவதியான 20 கிலோ தின்பண்டங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-08-14 13:30 GMT

ஈரோடு பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குளிர்பான கடைகளில் தீவிர சோதனை செய்தனர்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் சுகாதாரமற்ற, காலாவதியான 20 கிலோ தின்பண்டங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் குளிர்பானம் அருந்திய சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களில் குளிர் பானம் மற்றும் உணவுப் பொருள்கள் விற்கும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் அறிவுறுத்தலின் பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன் மற்றும் அருண்குமார் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில்  உள்ள உணவகம், கூல்ட்ரிங்க்ஸ் கடை மற்றும் பழச்சாறு கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, கடைகளில் நடத்துவதற்கான ஆவணங்களை சரிபார்த்ததுடன் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு காலாவதியான பொருட்களை விற்கக் கூடாது என்றும் திறந்த வழியில் வைத்து உணவுப்பொருட்களை விற்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

மேலும், இந்த சோதனையில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற முறையில் இருந்த சுமார் 20 கிலோ எடையுள்ள தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News