அந்தியூரில் காரை விற்று போலி சாவி மூலம் திருடிய புரோக்கர் உள்பட 2 பேர் கைது
Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பைனான்ஸ் மூலம் காரை விற்பனை செய்து விட்டு, போலி சாவி மூலம் காரை திருடிய புரோக்கர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பைனான்ஸ் மூலம் காரை விற்பனை செய்து விட்டு, போலி சாவி மூலம் காரை திருடிய புரோக்கர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பி- பிளாக் காவல் குடியிருப்பைச் சேர்ந்தவர் சபி (வயது 38). இவர், அண்ணாமடுவில் இரும்பு மற்றும் ரோலிங் சாட்டர் செய்யும் இன்டஸ்டிரியல் கடை நடத்தி வருகின்றனர். இவர், பைனான்ஸ் மூலம் வாங்கிய காரை கடையின் முன்பு கடந்த 12ம் தேதி இரவு நிறுத்தி வைத்திருந்தார். 13ம் தேதி காலை சென்று பார்த்தபோது, அந்த கார் காணாமல் போனது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
பின்னர், இதுகுறித்து அவர் அந்தியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், பவானி உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி, காரில் இருந்த 2 பேரை பிடித்து அந்தியூர் போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் குந்துபாயூரைச் சேர்ந்த காதர் பாட்சா (வயது 40), நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டையைச் சேர்ந்த ரசித் (வயது 29) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. மேலும், இதில் காதிர் பாட்சா சபிக்கு காரை விற்க புரோக்கராக செயல்பட்டதும், போலி சாவி மூலம் திருடியதும், ரசித் இதற்கு உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.