ஈரோட்டில் நாளை (செப்.29) இரண்டு மணி நேர மின்தடை அறிவிப்பு

ஈரோட்டில் நாளை (செப்.29) ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரம் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-09-28 02:59 GMT
ஈரோட்டில் நாளை (செப்.29) இரண்டு மணி நேர மின்தடை அறிவிப்பு

மின்தடை (பைல் படம்).

  • whatsapp icon

ERODE POWER SHUTDOWN 

Erode News, Erode Today News - ஈரோட்டில் நாளை (செப்.29) ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரம் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியர் அலுவலக மின் பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நாளை (செப்டம்பர் 29) ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

இதனால், நாளை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. எனவே, மின்தேவை ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு துணை மின் நிலைய ஆட்சியர் அலுவலக மின் பாதை:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:-  ஈரோடு குமலன்குட்டை பேருந்து நிறுத்தம், பாலக்காடு. பெருந்துறை சாலை, வி.ஐ.பி. காலனி, திருவிக வீதி, ஆசிரியர் காலனி மற்றும் ராணாலட்சுமணன் நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News