ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 180 மனுக்கள்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-30 13:15 GMT

ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து 180 கோரிக்கை மனுக்களை பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன்,  ஈரோடு, சாந்தாமணி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஈரோடு, விஸ்வநாதன், செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, ஈரோடு, மரகதமணி, தோட்டக்கலை துணை இயக்குநர், சாவித்திரி, முதுநிலை செயலாளர்,துணை இயக்குநர், ஈரோடு விற்பனைக்குழு, ஈரோடு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், ஈரோடு, செயற்பொறியாளர், நீர்வளஆதாரதுறை, ஈரோடு மற்றும் பவானிசாகர் அணை கோட்டம் அவர்கள் கலந்துகொண்டனர். மேலும் வருவாய்துறை அலுவலர்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் மற்றும் பிற துறைகளை சார்ந்த அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினைகள், மற்றும் இடுபொருட்கள் பிரச்சினை, காப்பீடு பணம் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.

Tags:    

Similar News