ஈரோடு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு ரயில் நிலையத்துக்கு அசாமின் திப்ருகரிலிருந்து வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 16 கிலோ கஞ்சாவை ஈரோடு ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.;
ஈரோடு ரயில் நிலையத்துக்கு அசாமின் திப்ருகரிலிருந்து வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 16 கிலோ கஞ்சாவை ஈரோடு ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
வெவ்வேறு மாநிலங்களிலிருந்து ஈரோடு வழியாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சமீப காலமாகத் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், போதைப் பொருட்கள், கஞ்சா போன்றவை கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து நிகழ்கிறது. இப்படி வரும் புகார்களின் அடிப்படையில் ஈரோடு ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, ஈரோடு வழியாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு பெட்டியாகச் சோதனையும் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஈரோடு ரயில் நிலையத்துக்கு அசாமின் திப்ருகரிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமை (இன்று) வந்தது. ரயிலில் ஈரோடு ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். பொது பெட்டியில் சோதனை நடத்திய போது கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையை திறந்து பார்த்ததில் 16 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அதனை சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.