அந்தியூர் அருகே 1.5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது

அந்தியூர் அருகே பர்கூர் சோதனைச்சாவடி வழியாக 1.5 டன் குட்கா பொருட்களை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-09 11:15 GMT

அந்தியூர் அருகே குட்கா பொருட்கள் கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சோதனை சாவடியில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மக்காச்சோள மூட்டைகளுக்கு அடியில் 55 முட்டைகளில் 1.5 டன் எடையுள்ள புகையிலை பொருட்களான ஹான்ஸ், விமல் பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்களை மைசூர் ராமபுரத்தில் இருந்து பவானி மைலம்பாடியில் உள்ள குடோனிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் ராமாபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (60) என்பவரை கைது செய்தனர். மேலும், சரக்கு வாகனத்தின் பின்னால் காரில் வந்த குட்கா பொருட்களின் உரிமையாளரான பவானி, டானா சாவடி வீதியைச் சேர்ந்த அருண் (36) என்பவரையும் போலீசார் கைது செய்து, 1.5 டன் குட்கா பொருட்கள், கார், சரக்கு வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News