ஈரோடு மாவட்டத்தில் தொடரும் மழை; நேற்று 148 மி.மீ மழையளவு பதிவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 148 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 148 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) இரவும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதேபோல் பவானி, அம்மாபேட்டை, கோபி, பெருந்துறை, தாளவாடி, கொடுமுடி, சத்தியமங்கலம், நம்பியூர் போன்ற பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.
மாவட்டத்தில் நேற்று (நவ.09) வியாழக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (நவ.10) வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
ஈரோடு - 1.30 மி.மீ ,
மொடக்குறிச்சி - 1.00 மி.மீ ,
கொடுமுடி - 8.00 மி.மீ ,
பெருந்துறை - 10.00 மி.மீ ,
சென்னிமலை - 3.00 மி.மீ ,
பவானி - 15.80 மி.மீ ,
கவுந்தப்பாடி - 28.20 மி.மீ ,
அம்மாபேட்டை - 14.20 மி.மீ ,
வரட்டுப்பள்ளம் - 17.00 மி.மீ ,
கோபி - 10.20 மி.மீ ,
எலந்தகுட்டைமேடு - 3.20 மி.மீ ,
கொடிவேரி - 6.00 மி.மீ ,
குண்டேரிப்பள்ளம் - 1.00 மி.மீ ,
நம்பியூர் - 2.00 மி.மீ ,
சத்தி - 3.00 மி.மீ ,
பவானிசாகர் - 8.20 மி.மீ ,
தாளவாடி - 11.00 மி.மீ ,
மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு 148.00 மி.மீ ஆகவும், சராசரியாக 8.71 மி.மீ ஆகவும் மழையளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.