அந்தியூர் அருகே பர்கூரில் 1.2 டன் புகையிலை பொருட்கள் தீ வைத்து அழிப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூரில் பறிமுதல் செய்யப்பட்ட 1.2 டன் புகையிலை பொருட்கள் தீ வைத்து அழிக்கப்பட்டது.

Update: 2024-09-27 00:45 GMT
புகையிலை பொருட்கள் தீ வைத்து அழித்த போது எடுத்த படம்.

அந்தியூர் அடுத்த பர்கூரில் பறிமுதல் செய்யப்பட்ட 1.2 டன் புகையிலை பொருட்கள் தீ வைத்து அழிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒரு மினி சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் சிறிய சிறிய மூட்டைகளாக கட்டி 1.2 டன் எடையுள்ள ரூ.9.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சரக்கு வேனில் வந்த இருவரும் கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து இருவரையும் போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக புகையிலை பொருட்கள் உள்ள மூட்டைகள் பர்கூர் மயானம் செல்லும் பாதைக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர், போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில் புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது.

Tags:    

Similar News