அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 11.60 ஏக்கர் நிலம் மீட்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஓடையை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டிருந்த 11.60 ஏக்கர் நிலத்தை நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.

Update: 2024-02-15 03:45 GMT

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ஓடை நிலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்ட அதிகாரிகள்.

அந்தியூர் அருகே ஓடையை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டிருந்த 11.60 ஏக்கர் நிலத்தை நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் அருகே உள்ள செலம்பூர் அம்மன் கோவில் வனப்பகுதியில் இருந்து எண்ணமங்கலம் ஏரி வரை வழுக்குப்பாறை பள்ளம், மற்றும் சின்ன வழுக்குப்பாறை பள்ளம் ஆகிய 2 ஓடை பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக சுமார் 11.60 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.


இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இந்நிலையில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரவி, உதவி பொறியாளர்கள் தமிழ் பாரத், பிரசன்னா, அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, துணை வட்டாட்சியர் ராஜசேகர், எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்குமார் மற்றும் வருவாய் துறையினர் 20க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

முதல் கட்டமாக ஓடையை ஆக்கிரமித்து 5.50 ஏக்கர் நிலத்தை மீட்டனர் . தொடர்ந்து, ஆக்கிரமிப்பில் உள்ள 6.10 ஏக்கர் நிலமும் மீட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News