ஈரோடு: அந்தியூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.11 லட்சம் பறிமுதல்
Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.11 லட்சம் ரொக்கம் வியாழக்கிழமை (இன்று) மதியம் பறிமுதல் செய்யப்பட்டது.;
Erode news- உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.11 லட்சம் பணத்தை அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்த தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர்.
Erode news, Erode news today- அந்தியூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.10 லட்சம் ரொக்கம் வியாழக்கிழமை (இன்று) மதியம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த காலகட்டத்தில் உரிய ரசீதுகள், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், அந்தியூர் தோப்பூர் விஸ்வேஸ்வரய்யா பள்ளி அருகே அந்தியூர் சட்டமன்றத் தொகுதி நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் சாகுல் ஹமீத் மற்றும் போலீசார் வியாழக்கிழமை (இன்று) மதியம் வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக சென்ற ஆம்னி காரில் வந்த நகலூரைச் சேர்ந்த புஷ்பாமேரி (வயது 58) என்பவரை நிறுத்தி சோதனை நடத்தினா். அவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 900 எடுத்து சென்றது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.11 லட்சத்தை பறிமுதல் செய்த கண்காணிப்பு குழுவினர், அந்தியூர் வட்டாட்சியா் அலுவலகத்தில் அந்தப் பணத்தை ஒப்படைத்தனா்.