தூய்மை இந்தியா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவு: கோபி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-10-01 05:15 GMT

கோபி பேருந்து நிலையத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணியை நகராட்சி தலைவர் நாகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்த போது எடுத்த படம்.

Erode Today News, erode news - கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாடு முழுவதும் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக அனைத்து நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  வருகிற அக்.2ம் தேதி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில், கோபி பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை நகர்மன்ற தலைவர் நாகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதனையடுத்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமாக சென்ற இப்பேரணியானது மீண்டும் கோபி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில்,  நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், ஆய்வாளர்கள் நிருபன் சக்கரவர்த்தி, சௌந்தர்ராஜன் உட்பட தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் மற்றும்  ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News