ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணியில் 10,970 அலுவலர்கள்

Erode news- ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணியில் 10 ஆயிரத்து 970 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.;

Update: 2024-03-21 11:45 GMT

Erode news- வாக்குச்சாவடி பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள அலுவலர்களுக்கான இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்த ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணியில் 10 ஆயிரத்து 970 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்து வைத்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஏப்ரல் -19 அன்று நடைபெறவுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு நாளன்று பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் உள்ளிட்ட 8 தொகுதிகளில் மொத்தம் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்களில் 2,666 முதன்மை அலுவலர்களும், 2,666 முதல் நிலை அலுவலர்களும், 2,666 இரண்டாம் நிலை அலுவலர்களும், 2,666 மூன்றாம் நிலை அலுவலர்களும், 306 நான்காம் நிலை அலுவலர்களும் என மொத்தம் 10 ஆயிரத்து 970 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். மொத்தம் உள்ள 2222 வாக்குச்சாவடிகளில், 255 வாக்குச்சாவடிகள் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ளவை ஆகும் என்றார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா,மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பெறப்பட்ட புகார்கள் குறித்து கேட்டறிந்ததோடு, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-0424 மூலம் 18 புகார்களும், 1950 எண் மூலம் 1 புகார் மற்றும் செயலி மூலம் 10 புகார்களும் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் சாந்த குமார் (ஈரோடு), கவிதா (ஆவின்), கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ரகுநாதன் (தேர்தல்), முஹம்மது குதுரத்துல்லா (பொது), அலுவலக மேலாளர் பாலசுப்பரமணியம், தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கர், கணினி நிரலாளர் வெங்கடேஷ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News