நத்தம் செல்வ விநாயகர் ஆலய குடமுழுக்கு: பக்தர்கள் வழிபாடு
நத்தம் டவுன் செல்லம் புதுார் செல்வவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது;
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் டவுன் செல்லம் புதுார் செல்வவிநாயகர் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவையொட்டி, நேற்று முன்தினம் அழகர் கோவில், கரந்தமலை, திருமலைக்கேணி, காவிரி, வைகை உள்ளிட்ட புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது.தொடர்ந்து தனபூஜை, கணபதி ஹோமம், நவக் கிரக ஹோமம் நடந்தது. நேற்று 2ம், 3ம் கால யாக பூஜைகள் நடந்தது.
தொட ர்ந்து 4ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து புனித தீர்த்த குடங்கள் பூஜைகளுக்கு பின் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்தி ரங்கள் முழங்க புனித நீர் கலசங்களில் ஊற்றப்பட்டு கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு, பூஜை மலர் களும், புனித தீர்த்தங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நத்தம் ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.வி.என். கண்ணன், வேலம்பட்டி ஊராட்சித் தலைவர் கண்ணன் மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் உள்ளிட்ட பல பங்கேற்று தரிசனம் செய்தனர்.