இறந்தவர் உடலை ஆற்று வழியாக நீரில் கொண்டு செல்லும் அவலம்...!
நத்தம் அருகே ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நத்தம் அருகே ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நத்தம் :
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சமுத்திராப்பட்டியில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊருக்கு ஆடுத்துள்ள திருமணிமுத்தாற்றின் கரையில் இடுகாடு அமைந்துள்ளது.
இந்நிலையில் ,கடந்த இரண்டு தினங்களாக திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது இதனால் திருமணிமுத்தாற்றில் அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் சமுத்திரப்பட்டியை சேர்ந்த பெரியாம்பிள்ளை என்பவர் வயது முதிர்வின் காரணமாக இறந்துள்ளார்.
இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்காக ஊர் பொதுமக்கள் உறவினர்கள் எடுத்துச் சென்றபோது, திருமணிமுத்தாற்றில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இறந்தவர் உடலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய இடுப்பளவுக்கு மேல் சென்ற தண்ணீரில் ஆபத்தான முறையில் இறந்தவர் உடலை தலைக்கு மேல் வைத்து சுமந்து சென்று இடுகாட்டில் வைத்து அடக்கம் செய்தனர்.
தொடர்ச்சியாக, மழைக்காலங்களில் இறந்தவர் உடலை இது போன்ற நிலையில்தான் ஆற்றைக் கடந்து அடக்கம் செய்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருமணி முத்தாற்றில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருவேளை அவ்வாறு உடலை கொண்டுசெல்லும் கூடுதல் வெள்ளம் வந்துவிடும் அபாயமும் உள்ளது. அப்படி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரிய விபரீதங்களை ஏற்படலாம். அதனால் அரசு இதை விரைந்து செய்து தரவேண்டும்.
இனியாவது அந்த கோரிக்கை நிறைவேறுமா..? அந்த பகுதி மக்கள் எதிர்பார்த்தது காத்துள்ளனர்.