Natham Area News திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியின் முக்கிய செய்திகள் ....படிங்க..,
Natham Area News திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் நடந்த முக்கிய செய்திகள் குறித்து பார்ப்போம்.;
Natham Area News
சாணார்பட்டியில் மாதர் சங்கத்தினர் மனு
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத் தில் பணிபுரியும் பணியா ளர்களுக்கு நிலுவையில்லாமல் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் 8 அம்ச வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் கலாவதியிடம் மனு அளிக்கப்பட்டது. மாநிலச்செயலாளர்ராணி தலைமை வகித்தார்.மாவட்டத் தலைவர் சுமதி,மாவட்டச் செயலாளர் பாப்பாத்தி, ஒன்றியத் தலைவர்ஈஸ்வரி,பொருளாளர் பழனியம்மாள் ஆகியோர்கலந்துகொண்டனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மூன்றுலாந்தர் தெரு அம்பா காம்ப்ளக்ஸ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நத்தம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நத்தம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பதுருதீன் ஹஜ்ரத் தலைமை தாங்கினார்.நத்தம் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் தர்பார் ஹாஜி நிஜாம்தீன்,மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது மீரான்,நத்தம் தொகுதி இளைஞரணி செயலாளர் அப்துல் பாசித் அலி,நத்தம் நகர தலைவர் மஸ்தான் ஹஜ்ரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Natham Area News
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இந்திய யூனியின் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றுவது.நத்தம் சட்டமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி புதிய கிளைகளை உருவாக்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதில், நத்தம் நகர செயலாளர் அபுதாஹிர்,நகர பொருளாளர் பஷீர் அஹமது,நகர மாணவரணி செயலாளர் முஹம்மது யாசீன்,நகர மாணவரணி அமைப்பாளர் முஹம்மது அமீன் உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய,நகர, கிளை,நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கோபால்பட்டி பகுதியில் நாளை மின்தடை:
நத்தம் அருகே வி.குரும்பபட்டி உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (23-11-2023) வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டிஅன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோபால்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, மணியக்காரன்பட்டி, சில்வார்பட்டி, மருநூத்து, கோணப்பட்டி, சாணார்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, மேட்டுப்பட்டி, காவேரிசெட்டிபட்டி, ஆவிளிபட்டி, முளையூர், சின்னமுளையூர், ஒத்தக்கடை, எர்ரமநாயக்கன்பட்டி, எஸ்.கொடை மற்றும் இராமராஜபுரம் ஆகிய ஊர்களில் மின்சாரம் இருக்காது என ,நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.