நத்தம் அருகே ,புரவி எடுப்பு திருவிழா..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள முடிமலை ஆண்டவர் கோயிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.

Update: 2023-12-01 10:11 GMT

நத்தம் அருகே நடந்த புரவி எழுப்பும் திருவிழா.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறை அடுத்துள்ள களத்துபட்டி முடிமலை ஆண்டவர், ராவள ஈஸ்வரன், கருப்பசுவாமி கோயில்களில் நடந்த புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பெரியூர்பட்டி முத்தாலம்மன் கோயில் குளக்கரையில் பிடிமண் எடுக்கப்பட்டுபிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் வானவே டிக்கைகளுடன் களத்துப்பட்டி முடிமலை ஆண்டவர் கோயில் மந்தைக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கண் திறக்கப்பட்டது.

அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபா ராதனை நடந்தது.

தொடர்ந்து ,பிரதிஷ்டை நேற்று செய்யப்பட்ட முடிமலை ஆண்டவர்,ராவளஈஸ்வரன், கருப்பசாமி, கன்னிமார்,குதிரை, காளை,மதிலை 5 சிலைகள் ஊர்மந்தையில் இருந்து ஊர்வலமாக புறப் பட்டு வாணவேடிக்கைகளுடன் வந்தது. சுற்று 5 கிராம பகுதிகளில் இருந்து - ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

Tags:    

Similar News