நத்தம் பகுதியில் உள்ள பள்ளி, கோயில்களில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
நத்தம் பகுதியில் உள்ள பள்ளி, கோயில்களில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விஜயதசமியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிகளில் அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மேலும், பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மஞ்சள் கலந்த பச்சரிசியில் முதல் உயிரெழுத்தான 'அ' வை குழந்தைகளின் விரலைக் கொண்டு எழுத வைத்தனர். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு 'அ' எழுத்தைத் தொடர்ந்து, ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நமக என எழுத வைத்தனர்.
நத்தம் அருகே ஜல்லிக்கட்டு கோவில் காளை உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்குட்பட்ட நல்லகண்டம் சின்ன அய்யனார்சுவாமி கோவில் ஜல்லிக்கட்டு காளை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. அதற்கு கிராம மக்கள் ஒன்றுகூடி இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அய்யனார் கோவில் காளைக்கு சிறுகுடி ஊராட்சி சுற்றுவட்டார கிராமமக்கள் ஒன்றுகூடி வேஷ்டி, துண்டுகள், மாலைகள் அணிவித்து சந்தனம் பூசி இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மேளதாளம் முழங்க வாகனத்தில் இறந்த கோவில் காளை எடுத்து செல்லப்பட்டு கோவில் மந்தை அருகில் அடக்கம் செய்யப்பட்டது. கிராமத்திற்கு பெருமை சேர்த்த கோவில்காளை இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
240 டன் குப்பை
திண்டுக்கல்லில் அக்.23, 24ல் சரஸ்வதி பூஜை,ஆயுதபூஜை, விஜயதசமி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நகரின் பல இடங்களில் தேங்கி கிடந்த கழிவுகளை அகற்ற கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி, மாநகர் நல அலுவலர் செபாஸ்டின், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, செல்வராணி உள்ளிட்ட அனைத்து சுகாதார ஆய்வாளர்களும் மாநகராட்சி 48 வார்டுகளிலும் குவிந்திருந்த 240 டன் கழிவுகளை 15 மினிவேன்,1 லாரி, 1JCP, 3 டிராக்டர்கள் மூலம் அகற்றினர்
மக்காத குப்பை 10 டன் வேடப்பட்டி எரியூட்டு மையத்திற்கு எடுத்து சென்று அழித்தனர். மக்கும் குப்பை தரம்பிரித்து நுண் உர செயலாக்க மையத்திற்கு அனுப்பப்பட்டது.