‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை’ - மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு
நத்தத்தில் அ.தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்தியார் கலையரங்கத்தில் அ.தி.மு.க.சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணாத்துரை 115.ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதற்கு அதிமுக.மாநில துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சரும் நத்தம் சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாதன் தலைமை வகித்து பேசியதாவது.
தி.மு.க.வில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாத்துரையின் பெயரை விட்டுவிட்டு, கருணாநிதி பெயரை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் சனாதனம் என்ற பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு மக்களை திசை திருப்பி விடுகின்றனர்.
மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் போய்விட்டது. மதுபானம், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்பனை பல இடங்களில் தாராளமாக நடக்கிறது, என்று பேசினார்.
இதில் நத்தம் ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சின்னு ராமராஜ்,சுப்பிரமணி, நத்தம் நகர அவைத் தலைவர் சேக்ஒலி, மாவட்ட பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், நகர் அம்மா பேரவை செயலாளர் சேக் தாவூது,மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் சிறுகுடி தினேஷ்குமார்,நத்தம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன்,சிவா, மீனாட்சிபுரம் கிளை நிர்வாகிகள் வேலு, மாரிமுத்து, செந்தில்குமார் உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய, நகர,கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.