நத்தம் அருகே உலக நன்மைக்காக பா.ஜ.க. சார்பில் குத்துவிளக்கு பூஜை

நத்தம் அருகே உலக நன்மைக்காக பா.ஜ.க. சார்பில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.;

Update: 2023-11-29 05:25 GMT

உலக நன்மைக்காக நத்தம் அருகே பா.ஜ.க. சார்பில்  நடந்த விளக்கு பூஜை.

நத்தம் கோவில்பட்டி பெருமாள் கோவிலில் பா.ஜ.க. சார்பில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணு ராஜகோபால சுவாமி கோவிலில் உலக நன்மை வேண்டி பா.ஜ.க. சார்பில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இப் பூஜையை ஸ்ரீனிவாசன் சுவாமிகள் சஹஸ்ரநாம மந்திரங்கள் சொல்லி  நடத்தி வைத்தார். முன்னதாக பெருமாளுக்கும் தேவியர்களுக்கும் திருமஞ்சணம் நடந்தது. அதன்பின்னர் துளசி, மல்லிகை, ரோஜா உள்ளிட்ட மலர்களால் ஆன மாலைகளை சுவாமிக்கு அணிவித்து தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் சமேத ஸ்ரீதேவி பூதேவி அம்மனுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் இராஜேந்திர பிரசாத், விஜயராஜ், வேலாயுதம்,அர்ச்சுணன்,அமிர்தம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே கன்னியாபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 36).விவசாயி. இவர் ,கடந்த 10ந் தேதி விவசாய பணிக்கான வேலைகளை முடித்துவிட்டு வழக்கம் போல் டிராக்டரை அவரது வீட்டின் முன்பு நிறுத்திச் சென்றார்.பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது, டிராக்டரை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து, சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் சந்தோஷ் புகார் செய்தார்.அதன் பேரில், சாணார்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் டிராக்டர் திருடிய கும்பலை பிடிக்க நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையில், சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராசு,ஏட்டுகள் கிருபாகரன்,ஜெரால்டு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து டிராக்டரை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்தனர்.

இதில் பெரும்பாறை மஞ்சள் பரப்பு பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி (வயது 32),பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் (36) ஆகிய 2 பேர் சேர்ந்து டிராக்டரை திருடி சென்றது தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் மருதுபாண்டி, ஆனந்த் ஆகிய 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேடசந்தூர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News