Kailasanathar Temple Sangabhishekam நத்தம் கைலாசநாதர் ஆலயத்தில்1008 சங்காபிஷேகம்
Kailasanathar Temple Sangabhishekam நத்தம் கோவில்பட்டிகைலாசநாதர் கோவிலில் இவ்வாண்டின் கார்த்திகை மாத கடைசி சோமவார திங்கட்கிழமையையொட்டி சோம வாரத்தில் உலக நன்மை வேண்டி1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.;
Kailasanathar Temple Sangabhishekam
தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் என பிறந்து விட்டாலே தெய்வீகம் துவங்கிவிடும்.காரணம் சபரிமலைக்கு செல்வோர் மாலை அணிவிக்கும் மாதம்.. அதேபோல் கோயில்களிலும் களை கட்ட துவங்கி விடும். கார்த்திகை மாதம் முழுக்க இப்படி பக்தர்கள் அணிவகுப்பார்கள் என்றால் இதற்கு அடுத்த மாதமான மார்கழியை ஆன்மீக மாதம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மார்கழி மாதம் முழுக்க இறைவனின் திருநாமத்தினை அதாவது பெருமாள் கோயில்களில் திருப்பாவையும், சிவன் கோயில்களில் திருவெம்பாவையும் ஒப்புவிக்கு அதிகாலை அதாவது பிரம்ம முகூர்த்தத்திலேயே பக்தர்கள் அணி திரண்டு விடுவர். மார்கழி மாதம் முழுக்க பஜனை கோஷ்டிகளின் பாடல்கள் நம்மை துாக்கத்திலிருந்து எழுப்பும் ஆற்றல் பெற்றதாக இருக்கும். மாதத்தில் நிறைந்த மார்கழியாக இன்னும் சில நாட்களில் வரப்போகிறாள்... அந்த வகையில் கார்த்திகை மாதம்முடிவடையும் தருவாயில்உ ள்ளதால் சிவன்கோயில்களில் சோமவார திங்கட்கிழமையையொட்டி சங்காபிஷேக நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
Kailasanathar Temple Sangabhishekam
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நடந்த கார்த்திகை சோமவார சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில். கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டின் கார்த்திகை மாத கடைசி சோமவார திங்கட்கிழமையையொட்டி சோம வாரத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி,சந்தனம், புஷ்பம் ,இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ,தாழம்பூ, வாடாமல்லிஜாதிமல்லி, மலர்கள் கொண்ட சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. முன்னதாக காலை கோவில் வளாகத்தில் 108 சங்குகளில் தாமரையில் சிவன் இருப்பது போல் அலங்கரிக்கப்பட்டது. மீண்டும் மாலை 5 மணிக்கு மேல் 1008 சங்குகள் மற்றும் மலர்களைக் கொண்டு சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டது. 1008 சங்குகளுக்கு முன் உலக நன்மை வேண்டி யாகம் வளர்த்து பூஜைகள் செய்யப்பட்டது. இந்த பூஜையில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.