திண்டுக்கலில் சுதந்திர தின விழா: தேசிய கொடியேற்றினார் மாவட்ட ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்டத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தேசிய கொடியேற்றினார்.

Update: 2023-08-15 09:34 GMT

திண்டுக்கல் ஆயுதப் படை மைதானத்தில், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி.

நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் 77வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை  முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் காவல்துறை, தீயணைப்புத்துறை,ஊர்க் காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். உடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சே. ஹா. சேக் மொகைதீன் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் சுதந்தர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுளை மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராகிங் எதிர்ப்பு திட்டம் குறித்து காவல் துறையின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.


திண்டுக்கல் மாவட்டத்தில், ராகிங் எதிர்ப்பு திட்டம் குறித்து காவல் துறையின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமத்தில், விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர்.எல்.ராதாகிருஷ்ணன் சீதாலட்சுமி, தலைவர், வேளாண்மை மற்றும் மாணவர் நலத்துறை, நாட்டு நலப்பணி திட்டம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜி.நாகமணி மற்றும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும், திண்டுக்கல் மாவட்ட இதில் ராகிங் எதிரான உறுதிமொழி காவல் கண்காணிப்பாளர், தலைமையில் மாணவர்கள் எடுத்தனர். மாணவர்களுக்கு, ராகிங் செய்தால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, போலீஸ் எஸ்.பி. பேசினார்

Tags:    

Similar News