நத்தம் அருகே தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திண்டுக்கல்லை அடுத்துள்ள நொச்சி ஓடைப்பட்டி அணுக்கிரகா கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;

Update: 2024-01-21 09:18 GMT

அணுக்கிரகா கல்லூரியில் நடைபெற்ற 10வது பட்டமளிப்பு விழா.

திண்டுக்கல்லை அடுத்துள்ள நொச்சி ஓடைப்பட்டி அணுக்கிரகா கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதற்கு, கல்லூரிச் செயலர் ஜார்ஜ் பெர்னாட்ஷா தலைமை தாங்கி விழாவினை, தொடங்கி வைத்தார். முன்னதாக, கல்லூரி முதல்வர் ஐசக் வரவேற்றார்.

இந்த விழாவில், மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ,மாணவியர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழும்,மதுரை காமராஜர் பல்கலைக்கழக அளவில் முதலாம் இடம் பிடித்தவர்களுக்கு கேடயமும்,பதக்கமும் வழங்கினார்.

இதில், கல்லூரி குழுமத்தின் தலைவர் லாரன்ஸ் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், 2021-2022 கல்வி ஆண்டில் 376 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

அதில், 259 இளங்கலை மாணவர்களுக்கும்,76 முதுகலை மாணவர்களுக்கும்,41 பட்டய படிப்பு மாணவர்களுக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் பட்டமளித்து சிறப்பித்தார்.

இந்த கல்லூரியில், சமூகவியல், உளவியல்,ஆங்கிலம் பிரெஞ்சு போன்ற பாடங்களில் மாணவர்கள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டமளிப்பு விழாவில் , பேராசிரியர்கள், மாணவ,மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News