நத்தம் அரசு பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா
மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சாணார்பட்டி ஒன்றிய பகுதி அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாண வர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா, மாவட்டக் கவுன்சிலர் க.விஜயன் தலைமையில் நடந்தது.
நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தர்மரா ஜன், மோகன், மாவட்ட துணைச் செயலாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய குழுத் தலைவர் பழனியம்மாள் சுந்தரம், துணைத் தலைவர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி, மாணவர்க ளுக்கு சைக்கிள் வழங்கினார்.
ம.தி.மு.க, ஒன்றிய செயலாளர் பாலகுரு, வேம்பார்பட்டி ஊராட்சித் தலைவர் கந்தசாமி, கோம் பைபட்டி தமிழரசி கார்த் திகை சாமி, கம்பிளியம்பட்டி விஜயா வீராசாமி, ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவிகள் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.
பின்பு, 2005-2006ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.
பின்பு, ஆண்டு தொடக்கத்திலேயே மாணவ - மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் வகையில் 2014-2015ஆம் ஆண்டில் 230 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் 2,86,400 மாணவர்கள் மற்றும் 3,57,600 மாணவிகள் என மொத்தம் 6,44,000 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
நீண்ட தொலைவில் இருந்து பள்ளிகளுக்கு வரும் மாணவ- மாணவியருக்கு உதவும் விதமாக தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசின் உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதையடுத்து, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்கள் பாடம் பயில தொடங்கினர். கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டதால் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தடைபட்டது.
இந்நிலையில், மாணவர்களுக்கு மீண்டும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022 -ல் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு ரூ. 323.03 கோடி செலவில் இலவச சைக்கிள் வழங்கப்படவுள்ளது.