Dindugal Area News திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதி செய்திகள்:

Dindugal Area News;

Update: 2023-10-28 13:40 GMT

நத்தம் அருகே ரிங் பால் போட்டிக்கு தேர்வான பள்ளி மாணவர்கள்.


அரசு பள்ளி மாணவர்கள்மாநில 'ரிங்பால்' போட்டிக்குதேர்வு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திராபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஜனகராஜ், ஹரிகிருஷ் ணன். இவர்கள் செம்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த 14 வயதுக்கு உட்பட்ட மாவட்ட அளவிலான 'ரிங்பால்'போட்டியில் கலந்துகொண்டு முத லிடம் பிடித்தனர். இதையடுத்து அவர்கள் 2024 ஆண்டு ஜனவரி மாதம் தர்ம புரியில் நடைபெற உள்ள மாநில அளவிலான 'ரிங்பால்' போட்டிக்கு தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.



திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி யில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம்.


எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வேம்பார்பட்டி, மருநூத்து, பாறைப்பட்டி பகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதற்கு தொகுதி செயலாளர் சாதிக் அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் அபுதாஹீர், தொகுதி நிர்வாகிகள் ராஜாமுகமது, அஜ்மீர்காஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீனத்திற்கும் ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிரா கவும் கோஷங்கள் எழுப்பபட்டது. இதில் கிளை நிர்வாகிகள் சதாம் உசேன், சிக்கந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News