திண்டுக்கல் பால் கூட்டுறவு சங்கத்திற்கு மத்திய அரசின் கோபால் ரத்னா விருது
திண்டுக்கல் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு மத்திய அரசின் கோபால் ரத்னா விருது வழங்கப்பட்டது.;
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே துவராபதி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி 2022 -23ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான விருது பெற்றுள்ளது. இந்த பள்ளியை, கௌரவிக்கும் விதமாக, இந்திய மாணவர் சங்கம் சார்பாக பாராட்டு விழா நடந்தது. மாவட்டச்செயலாளர் தீபக்ராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சிவ ராமகிருஷ்ணன்,ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ், வட்டாரத்தலைவர் ஜான்ஸ்டீபன், முன்னிலை வகித்தனர்.
தலைமையாசிரியர் அருணா, ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் ராணி, தலைவர் சுமதி, மார்க்சிஸ்ட் ஒன்றியச்செயலாளர் சின்னக்கருப்பன் . உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் எம்.எஸ். 158 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு மத்திய அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான கோபால் ரத்னா விருது பெற்று வந்த சங்க நிர்வாகிகளுக்கு பா.ஜ.க. சார்பில் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளரும், நத்தம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான சொக்கர், நத்தம் தெற்கு ஒன்றிய தலைவர் சேகர், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுதாகர், வழக்கறிஞர் பிரிவின் நத்தம் வடக்கு ஒன்றியத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.